மட்டக்களப்பு –  செங்கலடியில் இன்று  அதிகாலை 2 மணியளவில் இடம் பெற்ற வீதி விபத்தொன்றில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பை நோக்கி சென்று கொண்டிருந்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதி மருங்கிலிருந்த மின் கம்பத்துடன் மோதுண்டு நொருங்கியுள்ளது.


குறித்த விபத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த முஹம்மத் இப்றாஹிம் றிஸ்வான் (வயது 35), மட்டக்களப்பு ஊறணியைச் சேர்ந்த அப்புஹாமி வில்லியம் சிங்ஹ ஹேமாவதி (வயது 35) ஆகிய இருவருமே படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை குறித்த காரின் பின்னிருக்கை ஆசனத்தில் அமர்ந்திருந்து பணயம் செய்த தந்தை மற்றும் அவரது 4 மற்றும் 7 வயதான இரு சிறுவர்களும் எதுவித காயங்களுமின்றித் தப்பியுள்ளனர்.

குறித்த சம்பவம் பற்றி ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.