Jul 18

அகதிக் குழந்தையாக வந்தவருக்கு நீதிமன்றம் அளித்துள்ள மகிழ்ச்சியான செய்தி

குழந்தையாக இருக்கும்போது கனடாவுக்கு வந்த அகதி ஒருவர் நாடு கடத்தப்பட இருந்ததை நீதிமன்றம் தடை செய்துள்ளது.

Abdoul Abdi, 2000ஆவது ஆண்டு 6 வயதாக இருக்கும்போது ஒரு அகதியாக கனடாவுக்கு வந்தார்.31 காப்பகங்களுக்கு பந்தாடப்பட்ட அவர் தனது படிப்பை முடிக்கவோ கனடா குடியுரிமை பெறவோ இல்லை.

2014ஆம் ஆண்டு பொலிஸ் அதிகாரி ஒருவரைத் தாக்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டதையடுத்து, அரசாங்கம் அவரை நாடு கடத்தும் நடவடிக்கைகளில் இறங்கியது.

2016ஆம் ஆண்டு அவர் நாடு கடத்தப்பட இருந்தபோது கனடாவின் ஃபெடரல் நீதிமன்றம் அதற்கு தடை விதித்தது.தற்போது மீண்டும் அவரை நாடு கடத்த எடுக்கப்பட்ட முயற்சிகளும் தோல்வி அடைந்துள்ளது.

கனடா அரசியல் சாசனத்தின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள குடிமகனின் அடிப்படை உரிமைகளை முறையாக பரிசீலிக்க அரசு தவறிவிட்டதாகத் தெரிவித்துள்ள நீதிபதி சர்வதேச விதிகளின்படியும் நாடு கடத்தும் விடயத்தில் கனடா தனது கடமைகளை எண்ணிப் பார்க்கத் தவறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.