May 31

நேட்டோ மாநாட்டை துருக்கியில் நடத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எதிர்ப்பு

துருக்கியில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள 2018ஆம் ஆண்டிற்கான நோட்டோ உச்சிமாநாட்டை பெல்ஜியத்தில் நடத்துவதற்கு ஆதரவாக 18 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் கனடாவும் குரலெழுப்ப உள்ளதாக இன்று (புதன்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், இஸ்தான்புல்லிற்கும் இடையிலான உறவில் ஏற்பட்ட விரிசலை தொடர்ந்தே நேட்டோ மாநாட்டை துருக்கியில் நடத்துவதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

போலந்தில் கடந்த ஆண்டு ஜுலை மாதம் இடம்பெற்ற சந்திப்பொன்றின்போது, 2018ஆம் ஆண்டு துருக்கியில் நடைபெறும் நேட்டோ உச்சிமாநாட்டில் கலந்துக் கொள்ளுமாறு நேட்டோ உறுப்பு நாடுகளுக்கு துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன் அழைப்பு விடுத்திருந்தார். அதன்போது உறுப்பு நாடுகளின் தலைவர்கள் உத்தியோகப்பூர்வமற்ற வகையில் ஒப்புதல் அளித்திருந்தனர்.

இந்நிலையில், அடுத்த ஆண்டிற்கான உச்சிமாநாட்டை நடத்துவதற்கான இடத்தை உறுதிசெய்யும் வகையில் ஜூன் மாதம் உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கிடையே சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதன்போது 2018 நேட்டோ உச்சிமாநாட்டை துருக்கியில் நடத்தவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.