Jul 17

"விருப்பு, வெறுப்பு எனக்கில்லை " - ராகுல்

எனக்கு சாதி, மத வேறுபாடு கிடையாது என்றும், அனைவர் மீதும் ஒரே அன்பு கொண்டவன் என்றும் காங்., தலைவர் ராகுல் அவரது டுவிட்டரில் கூறியுள்ளார்.

சமீபத்தில் உ.பி.,யில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில்; முஸ்லிம் ஆண்களை மட்டும் காங்கிரஸ் ஆதரிக்கிறது. முஸ்லிம் பெண்களை ஏன் நினைத்து பார்க்கவில்லை. முத்தலாக் ரத்து மசோதாவை நாங்கள் தான் கொண்டு வந்தோம் என கூறினார். இவருக்கு பதில் அளிக்கும் வகையில் ராகுல் அவரது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: 

எனக்கு, சாதி, மத வேறுபாடு கிடையாது. கடைக்கோடியில் உள்ள மனிதனோடும் நான் இருக்கிறேன். அனைத்து உயிர்களிடத்தும் நான் அன்பு கொள்பவன். வெறுப்பது, ஒதுக்கி வைப்பது என்பதை நான் ஏற்று கொண்டதில்லை. வெறுப்பு, அச்சம் என்பதை அழிக்கவே விரும்புகிறேன். பாதிக்கப்படுவோரையும், வேதனைக்குள்ளானவர்களையும் நான் அரவணைக்கிறேன். நான் ஒரு காங்கிரஸ்காரன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்