Jul 17

லூசென்னில் உள்ள தேவாலய மணிகளுக்கு பதிலாக ஒலிக்கும் ரிங்டோன்கள்!

லூசென்னில் உள்ள செயிண்ட் பீட்டர் சிற்றாலயத்தின் மணி ஓசையை மொபைல் போன் ரிங்டோன்கள் தற்காலிகமாக பதிலீடு செய்யும். இது ஜூலை 30 வரை நீடிக்கும் கலைத் திட்டம் ஒன்றின் ஒரு பகுதியாகும்.

லூஸென்னின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றான சிற்றாலயத்தின் பாலத்திற்கு அருகே அமைந்திருக்கும், சிற்றாலய மணி கோபுரத்தில் கலப்பு மேசை ஒன்று நிறுவப்பட்டது.

தேவாலயத்தில் புதுப்பிக்கும் வேலை காரணமாக, அசல் மணிகள் கடந்த சில மாதங்களாக செயல்படவில்லை.

லூஸென்னிலுள்ள கத்தோலிக்க திருச்சபை, Lucerne University of Applied Sciences இல் இருந்து கலை மாணவர்களை, மறுசீரமைப்பில் ஈடுபடுத்த முடிவு செய்திருந்தது. மொபைல் ஃபோன் ரிங் டோன்களைக் கொண்டு மணிகளின் சத்ததை  மாற்றீடு செய்வதற்கான யோசனை நகைச்சுவை போல் தொடங்கினாலும், அந்த திட்டம் இறுதியில் ஒரு நிஜம் ஆனது.

இந்த கோயில் மணி புதுப்பித்தல் பணி எப்போது முடியும் என தெரியவில்லை. இந்த கோயிலின் மிகப்பழமையான பொருட்களில் இந்த மணியும்  ஒன்று, 1178ம் ஆண்டு இது நிறுவப்பட்டது.