May 31

ஐந்து மாடிக் கட்டிடம் ஒன்றிலிருந்து வீழ்ந்த சிறுமி

ஐந்து மாடிக் கட்டிடம் ஒன்றிலிருந்து வீழ்ந்த 11 சிறுமி ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேன் வீதி மற்றும் செப்பேட் அவனியூப் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதி ஒன்றிலேயே நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுமி எவ்வாறு கீழே விழுந்தார் மற்றும் அவருடைய பெயர் விபரங்கள் உள்ளிட்ட மேலதிக விபரங்கள் எதனையும் பொலிஸார் வெளியிடவில்லை.

குறித்த சிறுமி தொடர்ந்தும் கவலைக்கிடமாகவே உள்ளதாக அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.