May 31

பக்தாத் குண்டுவெடிப்பில் உயிரிழந்த மக்களுக்காக இருண்டது ஈபிள் கோபுரம்

ஈராக் தலைநகர் பக்தாத் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் வகையில், பரிஸ் ஈபிள் கோபுரத்தின் ஒளி விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டுள்ளன.

ஈராக் நகரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற இரட்டை கார்க் குண்டு தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர். இவர்களை நினைவுகூரும் வகையிலேயே நேற்று நள்ளிரவிற்கு முன்னர் ஈபிள் கோபுரத்தை இருளச் செய்துள்ளனர்.

ரமழான் மாதத்தில் கொள்வனவு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த முஸ்லிம் மக்களை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக பாதுகாப்பு தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். மேற்படி தாக்குதலில் 80 பேர்வரை படுகாயமடைந்துள்ளனர்.

ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் மேற்குறித்த இரு தாக்குதல்களுக்கும் உரிமை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.