Jul 17

விரைவில் வெளியாக இருக்கும் சியோமி ஸ்மார்ட்போனின் டீசர்

சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஜூலை 24-ம் தேதி அறிமுகமாக இருக்கும் நிலையில், இதற்கான அதிகாரப்பூர்வ டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஜூலை 24-ம் தேதி சர்வதேச சந்தைகளில் வெளியாக இருக்கிறது. இந்த விழாவில் Mi 6X ஸ்மார்ட்போனின் சர்வதேச பதிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், புதிய ஸ்மார்ட்போனின் டீசரை அந்நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. சியோமி கடந்த ஆண்டு அறிமுகம் செய்த Mi A1 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக புதிய ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது.

இதனை #2isbetterthan1 ஹேஷ்டேக் மூலம் சியோமி டீஸ் செய்திருக்கிறது.புதிய சியோமி Mi A2 ஸ்மார்ட்போன் 6X மாடலை போன்று பல்வேறு நிறங்களில் கிடைக்கும் என்றும் ஐரோப்பியாவில் தன் 4 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடலின் விலை PLN 1,299 இந்திய மதிப்பில் ரூ.23,950 விலையில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எனினும் ஆசிய சந்தைகளில் இதன் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என்றும் இந்தியாவில் ஆகஸ்டு மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.