Jul 17

தொடரை வெல்வது யார்? இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் இங்கிலாந்து அணி 86 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. இதனால் போட்டி தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்த நிலையில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லீட்சில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென் 3 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.

இன்றைய போட்டிக்கான இரு உத்தேச அணிகள் வருமாறு:-

இந்தியா: விராட்கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், சுரேஷ்ரெய்னா, டோனி, ஹர்திக் பாண்ட்யா, உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ், சித்தார்த் கவுல் அல்லது புவனேஷ்வர்குமார், யுஸ்வேந்திர சாஹல்.

இங்கிலாந்து: இயான் மோர்கன் (கேப்டன்), ஜாசன் ராய், பேர்ஸ்டோ, ஜோரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயீன் அலி, டேவிட் வில்லி, அடில் ரஷித், பிளங்கெட், மார்க்வுட்.