Jul 17

ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அமைச்சரவை மாற்றம்

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான மத்திய அமைச்சரவை எதிர்வரும் புதன்கிழமை மாற்றியமைக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய மற்றும் மாகாண அரசுகளுக்கு இடையேயான பிரச்சினைகள் அதிகரித்து வருகின்ற நிலையிலேயே இந்த அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

தேர்தல் நெருங்கும் காலகட்டத்தில் அமைச்சரவை மாற்றம் இடம்பெற்று புதிய அமைச்சர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அடுத்த தேர்தலில் போட்டியிட்டு வருகின்றனர்.

இம்முறை தற்போதுள்ள அமைச்சர்களில் அனேகமானவர்கள் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகின்றது.

அந்தவகையில் தற்போது மேற்கொள்ளப்படும் அமைச்சரவை மாற்றத்திற்கான காரணம் தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ள அதேவேளை, மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுநிலையை மேம்படுத்தும் நோக்கில் இந்த அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இருப்பினும் இது குறித்த தகவல்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி அன்று பிரதமர் வெளியிடுவார் என தெரிவிக்கப்படுகின்றது.