Jul 16

தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகம் திறப்பு


வவுனியாவில் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் அலுவலகமும், ஊடக மையமும் நேற்று வவுனியா வைரவபுளியங்குளம் தொடருந்து நிலையவீதியில் திறக்கப்பட்டது. சங்கத்தின் தலைவரும் மூத்த ஊடகவியலாளருமான பி.மாணிக்கவாசகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சங்கத்தின் அங்கத்தவர்கள் மற்றும் வர்த்தகர்கள் என்போர் கலந்துகொண்டனர்.