Jul 16

கனடாவில் நாளை முதல் குறைவடையும் வெப்பநிலை!

கனடாவின் சில பகுதிகளில் நேற்றும், இன்றும் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என சுற்றுசூழல் அதிகாரசபை தெரிவித்துள்ளது. 

அந்தவகையில் நேற்றும் (ஞாயிற்றுக்கிழமையும்), இன்றும் ரொறன்ரோ மற்றும் அதனை அண்டிய பிரதேசங்கள், ஹமில்டன் மற்றும் நயாகரா பகுதிகளில் 30 C ஆக வெப்பநிலை காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சில பகுதிகளுக்கு 40 C ஆக அதிகரிக்க கூடும் எனவும், இரவு வேளைகளில் 20 C ஆக இருக்கும் எனவும் சுற்றுசூழல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதனால் பணிகளுக்கு செல்பவர்கள் மற்றும் பெரும்பாலான நேரங்களை வெளியே செலவிடுபவர்கள் அதிக தண்ணீரை எடுத்து கொள்ளுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இவ் வெப்பநிலை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை குறைந்து 26 C ஆக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கியுபெக் மாகாணத்தில் நிலவிய கடும் வெப்பம் காரணமாக இதுவரை 54 ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.