Jul 16

30 கிலோ கஞ்சாவுடன் – காங்கேசன்துறை கடலில் சிக்கிய இருவர்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக் கடற்பகுதியில் இருவர் இன்று அதிகாலை கைது கடற்படையினரால் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 30 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. அவர்கள் பயணித்த படகும், மீனவர்களும் இன்னும் கரைக்குக் கொண்டு வரப்படவில்லை.

சந்தேகநபர்கள் இருவரும் இந்திய மீனவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.