May 31

ஆப்கான் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் பாரிய வெடிப்பு!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இன்று (புதன்கிழமை) பாரிய வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி மாளிகை மற்றும் வெளிநாட்டு தூதரகங்கள் என்பவற்றை அண்மித்த பகுதியிலேயே மேற்படி வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தையடுத்து குறித்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து 100 மீற்றருக்கு அப்பால் அமைந்திருந்த வீடுகள், வெடிப்பின் அதிர்வால் சேதமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், உயிரிழப்புகள் தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.