Jul 16

சமூக வலைதளங்களில் மு.க.ஸ்டாலினை விமர்சிக்க கூடாது : மதிமுகவினருக்கு வைகோ வேண்டுகோள்

திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினை சமூகவலைதளங்களில் விமர்சனம் செய்பவர்கள் மதிமுகவின் ஆதரவாளர்களாகவோ, மதிமுகவினராகவோ கருதப்பட மாட்டார்கள்  என்று மதிமுகவின் ெபாது செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: திமுக செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் குறித்து நம் இயக்கத் தோழர்கள் முகநூலிலோ, இணையதளத்திலோ, வாட்ஸ் அப்பிலோ, சமூக வலைதளங்களிலோ எந்த விமர்சனமும் செய்யக்கூடாது. 

அப்படிச் செய்பவர்கள் மதிமுக நலனுக்குப் பெருங்கேடு செய்பவர்கள் ஆவார்கள். இதனை மீறிச் செயல்படுகின்றவர்கள் மதிமுகவினராகவோ, ஆதரவாளர்களாகவோ, பற்றாளர்களாகவோ கருதப்பட மாட்டார்கள் மதிமுகவுக்கும் அவர்களுக்கும் எள் அளவு தொடர்பும் இல்லை. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.