Jul 14

பொதுத்தேர்தலுக்கு முன்பாக ராமர் கோயில் கட்டும் பணி துவங்கும்: அமித்ஷா

2019-ம் ஆண்டு பார்லி.லோக்சபா தேர்தலுக்கு முன்பாக ராமர் கோயில் கட்டும் பணி துவங்கும் என பா.ஜ.தேசிய தலைவர் அமித்ஷா கூறினார்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் வந்த அமித்ஷா கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டி, தெலுங்கானாவில் பா.ஜ.வை வலுப்படுத்துவதற்காக இங்குள்ள நிர்வாகிகள் கட்சி பணியில் தீவிரம் காட்டிவருகின்றனர்.

2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்பாகவே அயோத்தியில் ராமர் கோயில் கட்டும்பணி துவங்கும் என்றார்.