Jul 14

செயல்படாத டுவிட்டர் கணக்கால் மோடி, ராகுலை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை குறைவு

டுவிட்டரில் போலியாக மற்றும் செயல்படாத கணக்குகள் நீக்கப்பட்டதால் மோடி மற்றும் ராகுல் ஆகியோரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைந்தது.

உலகெங்கிலும் உள்ள ட்விட்டர் கணக்கில் செயல்பட்டு வருபவர்கள் தவிர்த்து, செயல்படாமல் ஆயிரக்கணக்கான கணக்குகள் கண்டறியப்பட்டுள்ளன.

அவற்றின் உரிமையாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களின் உண்மை விவரங்கள் இல்லாத நிலையிலும், தொடர்ந்து செயல்படாத நிலையிலும் உள்ளதால் அவை 'பூட்டப்பட்ட கணக்குகள்' என்று குறிப்பிடப்பட்டு ட்விட்டர் நிர்வாகத்தால் அவை நீக்கப்பப்பட்டுள்ளன.

இதையடுத்து பிரதமர் மோடியை அவரது ட்விட்டர் கணக்கில் பின்தொடர்பவர்களில் 2, 84, 746 எண்ணிக்கை குறைந்துள்ளது. அதே போன்று காங்.தலைவர் ராகுல் டுவிட்டர் கணக்கில் பினதொடர்பவர்கள் எண்ணிக்கை குறைந்தது.

இதுகுறித்து ட்விட்டர் மைக்ரோ வலைதளம் வெளியிட்டுள்ள பதிவு , உலகெங்கிலும் உள்ள பின்தொடர்பவர்களில் பூட்டப்பட்ட கணக்குகளை ட்விட்டர் கணக்கிலிருந்து இருந்து அகற்றுகிறோம், இதன் விளைவாக, பல சுயவிவரங்கள் தொடர்பான பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படலாம்'' இவ்வாறு பதிவிட்டு இருந்தது.