Jul 13

பிரான்ஸ் நாட்டினர் பெல்ஜியத்திலிருந்து வெளியேற்றம்!

ஜூலை 10 இடம்பெற்ற பிரான்ஸ் – பெல்ஜியம் அணிகளுக்கிடையிலான அரை இறுதி போட்டியில் பெல்ஜியம் தோல்வியடைந்து, உலகக்கிண்ண கனவை இழந்தது. 

இதனால் பெல்ஜியத்தில் பல்வேறு இடங்களில் வன்முறைகள் வெடித்துள்ளன. குறிப்பாக பெல்ஜியத்தில் வசிக்கும் பிரான்ஸை சேர்ந்தவர்களுக்கு எதிராக பல வன்முறைகள் வெடித்துள்ளன.

பெல்ஜியத்தின் Herseaux பகுதி உட்பட பல இடங்களில் பிரெஞ்சு மக்களின் கார்கள் எரியூட்டப்பட்டுள்ளன. போட்டி இடம்பெற்ற ஜூலை 10, இரவு 10.30 இல் இருந்து 11 மணிக்குள்ளாக பிரெஞ்சு இலக்கத்தகடுகள் கொண்ட ஏழு கார்களை தீவைத்து எரிந்துள்ளனர்.

பெல்ஜிய அணியின் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாததால் இதுபோல் இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பல கைதுகளும் பெல்ஜியத்தில் இடம்பெற்றுள்ளன.

இதுதவிர, பிரெஞ்சு-பெல்ஜிய எல்லையில் (Comines பகுதியில்) கூடிநின்ற பலரை இரு தரப்பு காவல்துறையினரும் அப்புறப்படுத்தியுள்ளனர்.

போட்டி முடிவடையும்போது வன்முறைகள் வெடிக்கக்கூடும் என முன்னரே கணித்த காவல்துறையினர் துரித கதியில் செயற்பட்டு அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

மேலும், பெரிதளவிலான வன்முறைகள் எதுவும் பதிவாகவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.