Jul 13

ஒப்போ ஃபைன்ட் X அறிமுகம்

ஒப்போ நிறுவனத்தின் ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

புதிய ஃபைன்ட் X ஸ்மார்ட்போனில் 6.42 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் AMOLED பானரோமிக் ஆர்க் ஸ்கிரீன், 19:5:9 ரக டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 8 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் சார்ந்த கலர் ஓஎஸ் 5.1 வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் புகைப்படங்களை எடுக்க 16 எம்பி பிரைமரி கேமரா, 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், ஏஐ போர்டிரெயிட்கள், ஏஐ ஸ்கிரீன் ரெக்ஃனீஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.

இது அதிகபட்சம் 800 சீன்களை கண்டறியும், இதன் ஸ்லைடிங் அம்சம் சுமார் 3,00,000 முறைக்கும் மேல் சோதனை செய்யப்பட்டிருக்கிறது.ஒப்போ ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் போர்டாக்ஸ் ரெட் மற்றும் கிளேசியர் புளு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

புதிய ஒப்போ ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் விலை ரூ.59,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்டு 3-ம் தேதி முதல் விற்பனை துவங்குகிறது. புதிய ஃபைன்ட் X ஸ்மார்ட்போனின் லம்போர்கினி எடிஷன் பின்னர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கும் ஒப்போ ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் ஜூலை முதல் முன்பதிவு செய்யப்படுகிறது. ப்ளிப்கார்ட் தளத்தில் முன்பதிவு செய்வோருக்கு ரூ.3000 மதிப்பிலான சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.