Jul 12

முல்லைத்தீவில் புதிய வர்த்தக நிலையங்கள் வழங்கிவைப்பு

முல்லைத்தீவு, மல்லாவி பொதுச்சந்தையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வர்த்தக நிலையங்கள் தற்போது வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்டுவருகின்றன.


வர்த்தகர்களின் கோரிக்கைக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துணுக்காய் பிரதேச சபையின் செயலாளர் கே.தனபாலசிங்கம் நேற்று (புதன்கிழமை) தெரிவித்தார்.

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச சபைக்குட்பட்ட மல்லாவி பொதுச்சந்தை வளாகத்தில் குறித்த கடைத்தொகுதி கடந்த 2013 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. எனினும் இதுவரை வர்த்தகர்களுக்கு கடைகள் வழங்கப்படாமல் இருந்தன.

இந்நிலையில் வர்த்தகர்களின் கோரிக்கைக்கு அமைவாக இதுவரை 8 கடைகள் வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக செயலாளர் தெரிவித்தார். ஏனைய கடைகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.