May 31

பைக் ஓட்டுவோரை பாதுகாக்கும் ஏர் பேக் சூட் வந்தாச்சு…

பைக் ஓட்டுவோரை பாதுகாக்கும் வகையில், உடலில் அணிந்துகொள்ளும் வகையில் ஏர் பேக் சூட் விற்கப்படுகிறது.

காரில் உள்ளதைப் போன்று, பைக் ஓட்டும்போது நம்மை பாதுகாக்க, இந்த ஏர்பேக் சூட் உதவும் என்று, கூறப்படுகிறது.ஏர் பேக் என்பது பலூன் போன்றதாகும், விபத்து நடக்கக்கூடிய சமயத்தில் அது உடனடியாக விரிந்து ஓட்டுநர் உள்ளிட்ட பயணிகளை காயம் இன்றி காக்க உதவுகிறது. இதன் மூலம் பெரிய விபத்துகளில் சிக்கினாலும் நம்மால் காயம் இன்றி உயிர்தப்ப முடியும்.

இந்நிலையில், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இருக்கக்கூடிய அதிகபட்ச பாதுகாப்பு உபகரணமே தலைக் கவசம் தான். (இதையும் பலர் அணிவது இல்லை என்பது தனிக்கதை). இதையும் தாண்டி

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெரிதாக பாதுகாப்பு உபகரணங்கள் சந்தையில் இல்லாமல் இருந்தது

காரில் பயணம் செய்பவரை விடவும் பைக்கில் செல்பவர்களுக்கே ஆபத்துகள் அதிகம். இதை கருத்தில் கொண்டு தற்போது ‘ஏர் பேக் சூட்' என ஒன்று சந்தையில் அறிமுகமாகியுள்ளது. இது கார்களில் உள்ள ஏர் பேக் தொழிநுட்பத்திற்கு நிகரானது. அதே போன்ற பாதுகாப்பை இந்த ஏர் பேக் சூட் ரைடர்களுக்கு வழங்குகிறது.

மோட்டோ ஜிபி எனப்படும் மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் கலந்துகொள்ளும் வீரர்களுக்காக, முன்னாடி தயாரிக்கப்பட்ட இந்த ஏர்பேக், அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன். அதான் இயக்குனர் விரும்பும் நேரம் கொடுத்துள்ளேனன்.