Jul 12

பாதசாரிகள் கடவையைக் கடந்தவருக்கு பக்கவாட்டில் வந்த அதிர்ச்சி!

வவுனியாவில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறித்த பாதசாரி, பாதசாரிகள் கடவையில் சென்றுகொண்டிருந்தபோதே இந்த விபத்திற்கு உள்ளாகி வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று காலை 9.30 அளவில், கார்கில்ஸ் பூட்சிட்டிக்கு முன்பாக உள்ள மஞ்சள் கடவையைக் கடக்க முற்பட்ட நபர் ஒருவரை வவுனியா நகரை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி மோதியது.

இதனால் கடவையைக் கடக்க முற்பட்ட நபர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையின் விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

எவ்வாறாயினும் முச்சக்கரவண்டியில் பயணித்த ஓட்டுநர் மற்றும் அவரது மனைவி, குழந்தை ஆகியோருக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்குச் சென்ற போக்குவரத்துப் பொலிசார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.