Jul 12

கதிர்காம உற்சவம் நாளை ஆரம்பம்

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நாளை (13) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.

நாளை ஆரம்பமாகி தொடர்ந்து 15 நாட்கள் பூஜை வழிபாடுகள் இடம்பெற்று இம் மாதம் 27 ஆம் திகதி நீர்வெட்டுடன் உற்சவம் இனிதே நிறைவுப்பெறவுள்ளது.

இதுவரை சுமார் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட யாத்திரிகள் ஆலயத்தை வந்தடைந்துள்ளனர் என, தெரிவிக்கப்படுகிறது.