Jul 12

சுவிஸில் அதிகரிக்கும் மூளை தொற்றை ஏற்படுத்தும் உண்ணி பரவல்

இந்த ஆண்டு encephalitis எனப்படும் மூளையை பாதிக்கும் உண்ணிகள் கணிசமான அளவு அதிகரித்துள்ளது என பொது சுகாதாரத்தின் மத்திய அலுவலகம் அறிக்கையிட்டுள்ளது. இந்த பரவலை தடுக்க, தடுப்பு ஊசி பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

150 பேருக்கு ஏற்கனவே இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. சிலர் அரிதான நிகழ்வுகளில் மரணமடையும் சந்தர்ப்பங்களும் உண்டு, என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜூன் மாதத்தில் மட்டும் 73 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டனர். இது முந்தைய ஆண்டுகளில் ஜூன் மாத புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும்போது கணிசமான அதிகரிப்பை காட்டுகிறது, சுகாதார அலுவலகம் கூறியது.

ரத்த உறிஞ்சும் இந்த உண்ணி வகை இந்த ஆண்டு ஆரம்பத்தில் மிகவும் தீவிரமாக உள்ளதாக சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.