Jul 12

இராணுவ வீரர் கொலையில் ஒருவர் கைது

இரத்மலானை பகுதியில் இராணுவ வீரர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


இரத்மலானை சக்கிந்தாராம வீதியில் கடந்த ஜுன் மாதம் 25 ஆம் திகதி ராணுவ வீரர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்நிலையில் குறித்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஒருவரை  அகுனுகுலபெலஸ பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்