Jul 12

ரொறன்ரோவில் பெண்களால் மேற்கொள்ளப்படும் தொடர் கொலைகள்!

ரொறன்ரோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் ஒரு பெண் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

ரொறன்ரோ, Madison வீதியில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்திருந்த நிலையில் அவர் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த ரொறன்ரோ பொலிஸார் துப்பாக்கி ஒன்றுடன் ஒருவரை கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், அதே பகுதியில் வாகனம் ஒன்றில் சென்ற ஒரு நபர், பாதசாரி ஒருவரை மோதிவிட்டு சென்றுள்ளார். இதன்போது காயமடைந்த பாதசாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தபட்டுள்ளார்.

அத்துடன் குறித்த பகுதியில் இடம்பெற்ற இரண்டு சம்பவத்திற்கும் தொடர்பு இருப்பதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.