Feb 25

என்னையும் ‘அட்ஜஸ்ட்’ செய்யச் சொன்னார்கள்: ரெஜினா!

சினிமாவில் அறிமுகமானபோது என்னையும் ‘அட்ஜஸ்ட் ’ செய்யச் சொன்னார்கள் என்று நடிகை ரெஜினா திடீரென ஒரு தகவலை வெயிட்டுள்ளார்.

நடிகை ரெஜினா தமிழில் ‘கண்ட நாள் முதல்’ படம் மூலம் அறிமுகமானார். பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வருகிறார். தற்போது ரெஜினா ‘மாநகரம்’ படத்தில் நடித்து வருகிறார்.


இந்தப் படத்தை பொடென்ஷியல் ஸ்டூடியோஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். இந்தப் படத்தில் சந்தீப், ஸ்ரீ, ரெஜினா, சார்லி, மூனீஷ்காந்த் ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை புதுமுக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.


இந்தப்படத்தின் புரமோசனுக்காக வந்திருந்த ரெஜினாவிடம் பாதிக்கப்பட்ட மலையாள நடிகை குறித்து கேட்டபோது, ‘’எங்களை சுற்றி இருப்பவர்களை நம்பித்தான் நாங்கள் வேலை செய்கிறோம்.


அவர்களே குற்றவாளியாக மாறுவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அவர்களுக்கு கொடுக்கிற தண்டனையை பார்த்து இன்னொருவருக்கு அந்த தவறை செய்ய துணிவு வரக்கூடாது.


அப்போது நான் வளர்ந்து வரும் நடிகை. போனிலேயே நடிக்க கூப்பிடுவார்கள். அப்படி போனில் அழைத்த ஒருவர் எல்லாம் பேசி முடித்த பிறகு தயங்கியபடி “அட்ஜஸ்ட் பண்ணிக்குவீங்களா” என்று கேட்டார்.


அப்போது எனக்கு அதன் பொருள் தெரியாது. பின்னர்தான் தெரிந்து கொண்டேன். கவனமாக இருப்பதுதான் நம்மை பாதுகாகத்துக் கொள்ளும் முதல் ஆயுதம்’’ என்றார் .