Jul 11

கனடாவின் இலங்கைக்கான தூதுவர் விக்னேஸ்வரனுடன் சிறப்பு சந்திப்பு!

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள கனடாவின் இலங்கைக்கான தூதுவர் டேவிட் மைக்கின்னன், வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனுடன் சிறப்பு சந்திப்பில் ஈடுபட்டுள்ளார்.

கைதடியிலுள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இன்று (11) காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது.

வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலமைகள், மக்களின் தேவைகள் உள்ளிட்டவை குறித்து இந்தச் சந்திப்பில் பேசப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, கனடா தூதுவர் நேற்று யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்குச் சென்று பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தியை சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.