Jul 11

மோட்டோ இ5 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

மோட்டோரோலா நிறுவனத்தின் இ5 மற்றும் இ5 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மோட்டோ இ5 மற்றும் இ5 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் முறையே 5.7 இன்ச் மற்றும் 6.0 இன்ச் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், 4000 எம்.ஏ.ஹெச். மற்றும் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றன.

ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் கொண்டிருக்கும் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் மோட்டோ டிஸ்ப்ளே மற்றும் மோட்டோ ஆக்ஷன், பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. மோட்டோ இ5 பிளஸ் மாடலில் 3D பாலிமர் கிளாஸ் பேக் மற்றும் உறிதியான சேசிஸ் வழங்கப்பட்டுள்ளது.அறிமுக சலுகைகள்:

- ஜூலை 11 மற்றும் 12-ம் தேதிகளில் அமேசான் வலைதளத்தில் மோட்டோ இ5 பிளஸ் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.800 வரை தள்ளுபடி பெற முடியும். 

- அமேசான் தளத்தில் ஜூலை 11 மற்றும் 12-ம் தேதிகளில் வாங்குவோருக்கு வட்டியில்லா மாத தவனை முறை வசதி வழங்கப்படுகிறது.

- அமேசான் தளத்தில் ஜூலை 11 மற்றும் 12-ம் தேதிகளில் தங்களது பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்வோருக்கு ரூ.1000 கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

- மோட்டோ இ5 மற்றும் இ5 பிளஸ் வாங்கும் ஜியோ பயனர்களுக்கு 130 ஜிபி வரை கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. 

- மோட்டோ ஹப்களில் பேடிஎம் மால் செயலி மூலம் மோட்டோ இ5 அல்லது இ5 பிளஸ் வாங்குவோருக்கு ரூ.1,200 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.