May 30

கனடாவில் நடைபாதை பாதுகாப்பை மதிப்பாய்வு செய்ய முடிவு

கனடாவில் கடந்த வாரம் ஐந்து வயது சிறுவன் ஒருவன் வாகனம் மோதி கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து நடைபாதை பாதுகாப்பை மதிப்பாய்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை மாலை ஐந்து வயதேயான சேவியர் மோகன் என்ற சிறுவன் வயதானவர் ஒருவருடன் தனது சைக்கிளில் சென்று கொண்டிருக்கையில் தனது சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார்.

இந்த நிலையில் அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று சிறுவன் மீது மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார்.

இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவனுக்கு ஏற்பட்ட காயங்கள் காரணமாக சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து பொது பணித்தலைவர் ஜே றொபின்சன் நகரின் போக்குவரத்து சேவைகளின் பொது முகாமையாளர் மற்றும் அவரது ஊழியர்களும் நகரத்தின் நடைபாதைகள் பாதுகாப்பு ஆய்வு ஒன்றை நடத்த உள்ளதாக ரொறொன்ரோ மேயர் ஜோன் ரொறி தெரிவித்துள்ளார்.

கடந்தவாரம் இடம்பெற்ற சோக நிகழ்வுகள் இடம்பெற்ற இடங்கள் போன்ற பகுதிகள் குறித்து சில அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் மேயர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பற்ற இப்பகுதிகள் குறித்து பொது மக்களின் ஆலோசனைகளையும் நகரம் எதிர்பார்க்கின்றது என குறிப்பிட்ட அவர்,

சிறுவன் மோதப்பட்ட பாதை உண்மையான ஆபத்தை விளைவிக்க கூடியதல்ல எனவும் ஞாயிற்றுகிழமை வெளியிட்ட செய்தி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சேவியரின் ஞாபகார்த்த சைக்கிள் சவாரி யூன் மாதம் 3ந்திகதி இடம்பெறுகின்றது.