Jul 10

10 ஹாக்கி வீரர்கள் உட்பட 16 பேர் கொலை

16 பேரின் உயிரிழப்பிற்கு காரணமாகிய, இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கனடாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி நிகழ்ந்த விபத்தில், ஹாக்கி போட்டி ஒன்றில் விளையாடச் செல்லும்போது Humboldt Broncos அணியைச் சேர்ந்த 10 ஹாக்கி வீரர்கள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டதோடு, 13 பேர் காயமடைந்தனர்.

இது தொடர்பாக Jaskirat Singh Sidhu எனும் 29 வயதான குறித்த இளைஞர், Calgary நகரில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் மீது, உயிரிழப்பை ஏற்படுத்தியதற்காக 16 குற்றச்சாட்டுகளும், காயம் ஏற்படுத்தியதற்காக 13 குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.அவ் விபத்தின்போது Jaskirat Singh Sidhu க்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் விபத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சிக்காக அவருக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் பொலிஸாரின் பங்களிப்பிற்காக Humboldt Broncos குழுமம் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது.