Jul 10

உலகவலம்....

இன்று உலகை அச்சுறுத்திவரும் மிகப்பெரிய ஆபத்து இந்த அணுக்குண்டுகளால்தான் என்பதுதெரிந்தவிடையமாகும். அணுக்குண்டு உற்பத்தியால் இன்று பல நாடுகள் பல கோடியைவருமானமாகப் பெற்றாலும் இது மனித குலத்திற்கு அழிவுப்பாதையையே காட்டிநிற்கின்றன.

பல ஆதிக்க நாடுகள் பெருந்தொகை அணுக்குண்டுகளை வைத்துக்கொண்டு தமக்குப் பாதுகாப்பைத்தேடிக்கொள்வதுடன் ஏனையநாடுகளை அச்சுறுத்தியும் வருகின்றன. இன்று உலகில் அதிகமானஅணுக்குண்டுகளை வைத்திருக்கும் நாடுகளை நோக்கினால்....

ரஷ்ஷியா - 7010 ரான் - 180

அமெரிக்கா - 6550 பாக்கிஸ்தான் - 140

பிரான்ஸ் - 300 இந்தியா - 130

சீனா - 270 யப்பான் - 80

பிரித்தானியா – 215 இஸ்ரேல் - 52

01-அமெரிக்காவிற்குச் சொந்தமானதுதான் ஹவாய் என்னும் தீவு. சென்ற மாதம் இந்தத்தீவிலுள்ள மலைகளில் இயற்கை அனர்த்தமாக ஏற்பட்ட எரிமலை விபத்தானது 1955ம்ஆண்டிற்குப்பின் மிகவும் மோசமான அனர்த்தமாகக் கருதப்பட்டுள்ளது. காடுகள்ரூபவ் வீதிகள்குடியிருப்புக்கள்  தொழிலகங்கள் ஆடு மாடுகள் என்றும் பெருந்தொகையான மக்களையும்இந்த எரிமலைக் குழம்புகள் குடித்து ஏப்பம் விட்டுள்ளன. நூற்றுக்கணக்கானோர் எரிந்துகாணாமல் போயுள்ளனர். மனிதன் எத்தனையோ சாதனைகளைப் படைத்தாலும் இந்தகைய இயற்கைச்சீற்றங்களை வெல்லமுடியுமால் திண்டாடுகிறான் என்றுதான் சொல்ல வேண்டும்.

03-உலகம் சுற்றும் கப்பலை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா...அமெரிக்காவில் ஒரு கப்பல்உலகைச் சுற்றிவரப் புறப்பட்டுள்ளது. 140 நாட்களில் உலகைச் சற்றிவர அமெரிக்காவின்புளோரிடா (குடழசனைய) துறைமுகத்திலிருந்து இந்தக்கப்பல் 382 பிரயாணிகளுடன் கடந்த1.6.2018 அன்று தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது. இக்கப்பல் 7 கண்டங்களையும் சேர்ந்த 32நாடுகளுக்குச் சென்று 62 துறைமுகங்களைத் தரித்துச் செல்லும். உலக கப்பல் வரலாற்றில்இதுதான் முதலாவது சாதனையாகப் பதிவாகின்றது. இந்த 140 நாட்களுக்குமான உணவு தங்குமிடம் மருத்துவம்  பொழுதுபோக்கு  பிரயாணம் என அனைத்துச் செலவுமாகத் தனி ஒருவருக்கானகட்டணம் வெறும் 55.000-00 டொலர்களாம். இதைவிட பிரத்தியேக வசதிகள் ஏஐP க்களுக்கானகட்டணம் 2.00.000-00 டொலர்களாம். எப்படி இருக்கும் இந்தக் கப்பல் பயணம்.

பயணங்கள்முடிவதில்லைத்தானே...

04-கோப்பிப் பானம் இன்று உலக மக்களால் விரும்பி அருந்தப்படும் குடிபானமாகமாற்றமடைந்து விட்டது. கோப்பி தென்னமெரிக்கநாடுகளிலும் ஆபிரிக்க நாடுகளிலும்தான்கூடுதலாக விளைகின்றது. ஐரோப்பிய நாடுகளிலும் குளிர்வலய நாடுகளிலும்தான் மக்கள்அதிகமாக கோப்பியை அருந்துகிறார்களால். இதைவிட இன்று பல நாடுகளில் இது ஒரு நாகரீகபானமாகவும் மாற்றமடைந்துவிட்டது. வளர்ந்த நாடுகளில் ஒரு கோப்பியின் விலைதான்கோப்பி உற்பத்தியாகும் வறியநாடுகளில் ஒரு மாதச்சம்பளம். அதாவது ஒரு கோப்பி ஸ்ரீஒரு மாதச்சம்பளம் என்பதும் வருந்தத்தக்க செய்தியாகும். கோப்பிகளில் பலவகை உண்டு.

கப்பிச்சீனோ  எக்ஸ்பிறசோ லக்கிமக்கியாற்றா  மில்ஸ்கபே என்று பலவகை உண்டு.இவற்றைத் தவிர்த்து இன்று உலகில் தலைநகரங்களில் சாதாரண ஒரு கப் கோப்பியின் விலையைப்பார்த்தால் அதிசயப்படுவீர்கள்.

01-டென்மார்க் - கோபன்காகன் - 6.24 டொலர்

02-சுவீஸ்லாந்து - சூரிச் - 4.98 „

03-சீனா - சாங்காய் - 4.60 „

04-அமெரிக்கா - நியூயோர்க் - 3.12 “

05-யேர்மனி - பிராங்போட் - 2.82 “

05-பிளாஸ்ரிக்  நைலோன் பொருட்களால் இன்று உலகம் கடுமையாகப் பாபதிக்கப்படுவதாகஉலக சுற்றாடல் தாபனம் தனது வருடாந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இது இன்றுஉலகநாடுகளின் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துவருகின்றது.

இந்தப் பொருட்களைப் பலநாடுகள் தடைசெய்திருப்பதுடன் படிப்படியாகப் பாவனையைக் குறைப்பதற்கான சட்டங்களையும்அமுல்படுத்தி வருகின்றன. இந்தப் பிளாஸ்ரிக் நைலோன் வகைப் பொருட்களை கடல்  குளம்ரூபவ்ஆறுகள் போன்ற நீர் நிலைகளுக்குள் வருடாவருடம் சுமார் 5 லட்சம் தொன் அளவில்வீசப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுழல் மாசுபட்டு நீர் நிலைவாழ்உயிரினங்கள் பெருமளவு அழிந்து வருகின்றன. இவை மட்டுமல்லாமல் மனித ஆரோக்கியவாழ்வுக்கும் இவை கேடுவிளைவிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில பொருட்கள் எவ்வளவு காலம்தண்ணீர்க்குள் பழுதுபடாமல் கிடக்கும் என்பதைப் பார்த்தால் நீங்கள் அதிசயப்படுவீர்கள்.

-பிளாஸரிக் பை வகைகள் - 10 – 20 வருடங்கள்

-பிளாஸ்ரிக் கப்  றபர் கப் வகைகள் - 40 – 50 „

-கைத்தொழில் பிளாஸ்ரிக்  வயர் வகைகள் - 40 – 50 „

-குழந்தைகளின் பம்பஸ் வகைகள் - 400 – 450 „

-பிளாஸ்ரிக் போத்தல் வகைகள் - 400 – 450 „

-நைலோன் கயிறுகள் நைலோன் வகைகள் - 400 – 450 „

ஆகவே பிளாஸ்ரிக் பைகள் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்களின் பாவனையை நாம்படிப்படியாகக் குறைக்க வேண்டும். இல்லையேல் நமக்கு நாமே தீங்குவிளைவிப்போம். இதுதற்கொலைக்குச் சமனான விடையமாகும்.

06-இன்றைய உலகில் மின்சாரத்தின் பாவனையும் வேகமாகக்கூடி வருவதுடன் அதனால் ஏற்படும்நன்மை தீமைகளும் அதிகரித்திருக்கின்றன. மின்சாரப் பாவனையால் உலகம்முன்னேறினாலும் பல தீமைகளும் நட்டங்களும் இருக்கத்தான் செய்கின்றன. இந்த மின்சாரப்பொருட்களின் கழிவுகளை வெளியேயும் நீர் நிலைகளிலும் வீசிவிடுவதால்உலகச்சுற்றாடலுக்குப் பங்கம் விளைவிப்பதாகவும் இதனால் பல உயிரழிவுகள் ஏற்படுவதாகவும்உலக சுற்றாடல் தாபனம் அறிவிக்கின்றது. அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு கணிப்பின்படிவருடாவருடம் சுமார் 44.7 மில்லின் தொன் (இது சுமார் 4.500 யானைகளின் நிறைக்குச்சரிசமன்) மின்சாரக் கழிவுகள் வெளியே கொட்டப்படுவதாகத் தெரிவிக்கின்றது. ஆகவே நாம்இந்த மின்சாரக் கழிவுப் பொருட்களை அளவோடு பாவித்துப் பயன்பெறுவதுடன் அதன்கழிவுகளையும் அதற்கென ஒதுக்கப்படும் இடங்களில் கொடுத்து இந்தப் பூமியைப்பாதுகாப்போம்.

07-இந்த நூற்றாண்டில் சமூக ஊடகங்களின் பங்கு அளப்பரிய வளர்ச்சியாகக்கருதப்படுகின்றது. கணனி தொழில் நுட்பங்களின் வளர்ச்சி அதிவேகமாகவளர்ச்சிகண்டிருப்பதால் இன்று உலகம் பலவகையான மாற்றங்களையும் வளர்ச்சியையும்கண்டுவருகின்றது. அந்தவகையில் சமூக வலைத்தளங்களில் ஒன்றான முகப்புத்தகத்தின் (குயஉநடிழழம)வளர்ச்சிதான் அதிசயத்தக்க விடையமாக அமைந்துவிட்டது. உலகில் இதன் பாவனையால் தீமைகளும்உண்டானாலும் நன்மைகளே மிக அதிகம். இருப்பினும் பாவனையாளர்களின் தன்மையைப்பொறுத்தே இதன் இலக்குகள் தீர்மானிக்கப்படுகின்றது. அந்த வகையில் உலகில் இந்தமுகப்புத்தகத்தின் பாவனை மலைபோல் உயர்ந்து வருகின்றது. கடந்தகாலப் பாவனையாளர்களைப்பார்ப்போம்.

2004ல் - 1 மில்லியன்பேர் 2011 - 845 மில்லியன்பேர்

2005 - 6 „ 2012 - 1056 „

2006 - 12 „ 2013 - 1228 „

2007 - 58 „ 2014 - 1393 „

2008 - 145 „ 2015 - 1591 „

2009 - 360 „ 2016 - 1860 „

2010 - 608 „ 2017 - 2129 „

08-இன்று உலகில் உணவுப்பழக்கம் அளவுக்கு மீறிப் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. அதிவேகஉணவுகள்  புரதம்  மா  சீனி  எண்ணெய் போன்ற உணவுப்பழக்கம் வெகுவாக உலகில்அதிகரித்துள்ளதால் மனிதர்கள் பலவித நோய்களை வலிந்து தேடிக்கொள்ளும் அவலம்ஏற்பட்டிருக்கின்றது. இந்த உணவுகளின் பாவனை அதிகரிப்பால் இன்றைய மனிதர்கள் அதுவும்வளர்முக நாடுகளில்தான் அளவுக்கு அதிக நிறைகூடிய மனிதர்கள் காணப்படுவதாகவும் இதனால்பலர் இறப்பு வயதிற்கு முன்பாகவே உயிரிழந்துவிடுவதாகவும தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் ஒவ்வொரு நாட்டுக்கும் மருத்துவச் செலவுகளும் அதிகரித்துப் பெரும்பிரச்சனையாகமாறியிருக்கின்றது. ஆகவே நாம் இயற்கை உணவுகளை தேடி உண்ணும் பழக்கத்தைக்கூட்டிக்கொள்வதுடன் எண்ணெய்  கொழுப்பு  மா  சீனி வகைப் பொருட்களைப் பாவிப்பதைப்படிப்படியாகக் குறைக்க வேண்டும். அப்படிக் குறைத்தால்தான் நமக்கு நீண்டு ஆயுளும்கிடைக்கும். அந்த வகையில் இன்று உலகில் அளவுக்கு அதிகமான உடற்பருமனைக்கொண்ட மக்கள்வாழும் நாடுகளைப் பார்ப்போம். அந்த நாட்டின் சனத்தொகையில் வீதம்.

1வது-மெக்ஸிக்கோ - 73 வீதம்பேர் உடற்பருமன் கூடியவர்கள்

2வது-அமெரிக்கா - 70 „ „ „

3வது-யேர்மனி - 60 „ „ „

4வது-பிரான்ஸ் - 54 „ „ „

5வது-எண்ணெய் ஏற்றுமதி

நாடுகள் - 54 „ „ „

09-உலக வல்லரசான அமெரிக்காவில் ஆயுதக்கலாச்சாரம் வளர்ந்துவருவதாகத்தெரியவருகின்றது. அண்மையில் நடைபெற்ற சம்பவங்களை வைத்துப் பார்க்கும் போதுபாடசாலைச் சிறார்களிடத்திலும் இந்த ஆயுத மோகம் குடிகொண்டு வளர்ந்துள்ளதால் பலநூற்றுக்கணக்கான பாடசாலை மாணவர்களும் இந்தத் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியாகியபரிதாப சம்பவங்களும் இந்த நாட்டில் அதிகமாகவே இடம்பிடித்துள்ளன. அமெரிக்காவின் ஒருநகரமான சிக்காக்கோ நகரத்தை மட்டும் எடுத்து நோக்கினால் 2016 – 2017 ஆண்டுக்காலப்பகுதியில் பல வன்முறைச் சம்பவங்களால் சுமார் 650 பேர் பரிதாபமாகஇறந்திருக்கிறார்கள். பொலிசாருக்கு எதிரான தாக்குதல்கள் நிறவெறித்தாக்குதல்கள் என

800 பேர்வரை கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 30 வீதமான சம்பவங்கள் பொலிசாரால்நிகழ்த்தப்பட்டவையாவும் தெரிவிக்கப்பட்டது. 93 வீதமான சம்பவங்களில் கறுப்பினத்தவர்களேபலியாகியிருக்கிறார்கள். இந்த நகரத்தைப் பொறுத்தளவில் 70 வீதம்பேர் தற்போதுவேலையில்லாமல் இருக்கிறார்களாம். 2000ம் ஆண்டளவில் 40 வன்முறைக்குழுக்கள் (புயபௌ)காணப்பட்டதாவும் தற்போது இந்தக் குழுக்களின் எண்ணிக்கை 100 ஐயம் தாண்டியுள்ளதாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தபெரிய உலகப் பொலிஸ்காரனாகிய அமெரிக்காவினால்தன்நாட்டு உள்நாட்டு ஆயுதக் கலாச்சாரத்தை ஒழிக்கமுடியாமல் திண்டாடிக்கொண்டு உலகநாடுகள்சிலவற்றில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்துவருவதை எப்படிச் சொல்ல.....

10-உலகின் மிகச்சிறிய நாடான வடகொரியா உலகின் மிகப்பெரிய நாடானஅமெரிக்காவை வில்லாதி வில்லனை சுமார் 65 ஆண்டுகளாக வெருட்டி வந்தது. அதாவது பூனையும்யானையும் மோதினால் எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனைதான். கடுகு சிறிதானாலும்காரம் பெரிது. வடகொரியாவிடம் அந்த அளவுக்கு ஆயுதபலம் அணுக்குண்டுப் பலம்ரூபவ் இரசாயனஅணு ஆயுதத்தின் பலம் என அமெரிக்கா மட்டுமல்ல பல நாடுகள் வடகொரியாவுடன்மோதுவதற்கு அஞ்சியே வந்துள்ளன. நூற்றுக்கு நூறு வீதம் வடகொரியா அணுக்குண்டுரூபவ்கணனித் தொழில் நுட்பங்களில் நூற்றுக்கு நூறுவீதம் முன்னேற்றம் கண்டநாடாகும்.

அங்கு பசிபட்டினி அடக்குமுறை ஆட்சி இருந்துவந்தாலும் அந்த மக்களின் முயற்சி மனஉறுதி  வீரம்  உழைப்பு என அனைத்தும் ஒன்று சேர்ந்தே பல நாடுகளைகிட்டநெருங்கவிடமுடியாமல் பார்த்துக்கொண்டது. பல நாடுகள் பல தலைவர்கள் முயற்சியால்அமெரிக்காவும் வடகொரியாவும் 65 வருடகால பகமையை மறந்து இரு நாட்டுத் தலைவர்களும்கடந்தமாதம் சிங்கப்பூரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்திச் சென்றுள்ளபடியால் இருநாடுகளுக்குமிடையிலான முரண்பாடுகளும் போர்ப்பீதிகளும் வலுவாகக் குறைவடைந்திருப்பதாகஅவதானிகள் நோக்கியுள்ளனர். நமக்கெல்லாம் நல்ல செய்திதான். ஏனென்றால் சென்றஆண்டளவில் இரு நாடுகளுக்கிடையிலும் போர்வெடிக்கும் அது உலக யுத்தமாகவும் மாறலாம்

என்று எதிர்பார்க்கப்பட்டது. இது இன்று மாற்றமடைந்து சமாதானம் ஏற்பட்டதை நாமும்வரவேற்போம்.

(யேர்மனிய ஆங்கில டொச் பத்திரிகைகள்  சஞ்சிகைகளில் பெறப்பட்ட தகவல்களாகும்)

வ.சிவராசா – யேர்மனி