Jul 09

சீனாவில் மனித முகத்துடன் பிறந்த வினோத பன்றிக்குட்டி!

சீனாவில் மனித முகம் மற்றும் கோழி வாயுடன் பிறந்த வினோத பன்றிக்குட்டி ஒன்று பிறந்த இரண்டு நாட்களில் உயிரிழந்துள்ளது. தென்கிழக்கு சீனாவில் உள்ள கிராமத்தில் சில தினங்களுக்கு முன்னர் பன்றி ஒன்று குட்டியை ஈன்றது. 

குட்டியானது பார்ப்பதற்கு மிக வினோதமாக இருந்தது, அதாவது அதன் முகம் மனித முகம் போலவே இருந்தது. இதோடு கோழி போன்ற வாயும், யானை போன்ற தந்தமும் பன்றிக்குட்டிக்கு இருந்தது. இந்த வித்தியாசமான பன்றிக்குட்டியை பார்த்த கிராம மக்கள் ஆச்சரியமடைந்ததோடு பலர் வீடியோவும் எடுத்தார்கள்.

ஆனால் துரதிஷ்டவசமாக பிறந்த இரண்டு நாட்களில் அந்த பன்றிக்குட்டி இறந்துவிட்டது. மருத்துவர்களின் கூற்றுப்படி cyclops syndrome என்னும் விசித்தர நோய் பாதிப்பால் பன்றிக்குட்டி அவ்வாறு பிறந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. இந்நோய் மனிதர்களை கூட தாக்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.