Mar 13

நைஜர் நாட்டிற்குச் செல்லவுள்ள கனேடிய விசேட படையணி

கியூபெக்கைத் தளமாகக் கொண்ட  பிரெஞ்சு மொழி பேசும் படையினரைக் கொண்ட குழு ஒன்று, மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜர் இல் பணியாற்ற உள்ளது. இக்குழுவில் 25 கனேடியப் படையினர் இடம்பெற்றிருப்பார்கள்.

சமஷ்டி லிபரல் அரசாங்கத்தின் சர்வதேச அளவில் அமைதிபேணும் கொள்கையின் அடிப்படையில் இந்த இராணுவக் குழு அங்கு செல்லவுள்ளதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனேடியப் படையினர் நைஜர் நாட்டில் சேவையாற்றும் பந்நாட்டுப் படையினருக்கு விசேட பயிற்சிகளை வழங்க உள்ளனர்.