Jul 09

காணாமற்போன சிறுவனை தேடும் பணி தொடர்கிறது

வடமேற்கு ஆல்பர்டா ஆற்றின் அருகே குடும்பத்துடன் சென்ற 2 வயது சிறுவன் ஒருவன் காணாமல் போனதை அடுத்து அவரை மீட்கும் பணிகள் 2 ஆவது நாளாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை குறித்த சிறுவன் காணாமல் போனதை அடுத்து வாபிட்டி ஆற்று பகுதியில் இருந்து தேடுதல் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில்  குறித்த ஆற்றின் இரு பக்கங்களில் இருந்தும் 100 மீட்டர் பரப்பில் தேடுதல் நடத்தப்பட்டதாகவும், 3 படகுகளில் சுமார் 30 ற்கும் மேற்பட்டவர்கள் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த தேடுதல் நடவடிக்கையின் போது றோயல் கனேடியன் மவுண்டட் பொலிஸார் பொதுமக்களை அப்பகுதியில் இருந்து விலகியிருக்குமாறு கூறியுள்ளனர்.