Jul 09

பரிஸில், எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெற இருக்கும் வான வேடிக்கை!

பரிஸின் வெவ்வேறு பகுதிகளில், ஜூலை 14 தேசிய நாள் நிகழ்வுகள் இடம்பெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் ஒழுங்கு செய்யப்பட்டு கொண்டிருக்கின்றன. 

இதில், இம்முறையும் மிகவும் புகழ்பெற்ற ஈஃபிள் கோபுர வானவேடிக்கை நிகழ்வு இடம்பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 14 சனிக்கிழமை இரவு 11 மணிக்கு வானவேடிக்கைகள் ஈஃபிள் கோபுரத்தில் இடம்பெறும்.

இதுதவிர பல்வேறு இசை நிகழ்வுகளும் இடம்பெற உள்ளது. அத்துடன் Champ-de-Mars இல் l’Orchestre National de France இன் இசை நிகழ்வுகளும் மிக பிரம்மாண்டமாய் இடம்பெற உள்ளது.

இரவு 9.15 மணிக்கு ஆரம்பிக்கும் இசை நிகழ்வு 11 மணி அளவில் நிறைவுக்கு வர, அதைத் தொடர்ந்து வானவேடிக்கைகள் இடம்பெறும் என ஈஃபிள் கோபுர நிர்வாகிகள் (SETE) தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்விற்காக பலர் வருடா வருடம் அங்கு வருகை தருகிறமை குறிப்பிடத்தக்கது.