May 30

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: இந்தியா - வங்காளதேசம் இன்று மோதல்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - வங்காளதேச அணிகள் இன்று மோதுகின்றன.8-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 1-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடக்கிறது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி, தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வருகிற 4-ந் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

தற்போது சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கான பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகிறது. மழையால் பாதிக்கப்பட்ட தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி ‘டக்வொர்த் லீவிஸ்’ விதிமுறைப்படி 45 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.

இந்த நிலையில் லண்டனில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி, வங்காளதேச அணியை சந்திக்கிறது.