May 30

10,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் பிரித்தானியா வீராங்கனை வெற்றி

10,000 மீற்றர் ஓட்டப் போட்டியில் பிரித்தானியாவின் வீராங்கனை ஒருவர் வெற்றியீட்டியுள்ளார். லண்டனில் நடைபெற்ற மகளிருக்கான விட்டாலிட்டி 10,000 மீற்றர் ஓட்டப் போட்டியிலேயே அவர் வெற்றியீட்டியுள்ளார்.

ஐந்து தடவைகள் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றெடுத்த ஜோ பவே ( Jo Pavey) இந்தப் போட்டித் தொடரிலும் சம்பியன் பட்டம் வென்றுள்ளார். 43 வயதான ஜோ சிறந்த முறையில் போட்டியில் பங்கேற்று வெற்றியீட்டியுள்ளார்.

இதேவேளை, 10,000 மீற்றர் ஆண்களுக்கான போட்டித் தொடரில்  அன்ரூ புற்சாட் (Andrew Butchart) ) சம்பயின் பட்டம் வென்றுள்ளார். இவர் இரண்டாவது தடவையாக சம்பியன் பட்டம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.