Jul 07

சுவீடனுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் பாதியில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்கிய 3-வது காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து - சுவீடன் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

போட்டி தொடங்கிய நேரத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் கோல் அடிக்கும் ஆர்வம் இல்லாமல் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர்.ஆட்டத்தின் 30-வது நிமிடத்தில் இங்கிலாந்திற்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது.

அஷ்லே யங் பந்தை உதைக்க மேகுய்ர் தலையால் முட்டி கோல் அடித்தார். இதனால் இங்கிலாந்து 1-0 என முன்னிலைப் பெற்றது. அதன்பின் இரு அணிகளும் கோல் அடிக்காததால் முதல் பாதி நேரத்தில் இங்கிலாந்து 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.