Jul 07

பிரான்ஸில் தடை செய்யப்பட்ட இரவு நேர பொது போக்குவரத்து!

Nantes நகரில், காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் 22 வயதான இளைஞன் கொல்லப்பட்டதை அடுத்து, Nantes நகரில் அடுத்தடுத்து வன்முறைகள் வெடித்து வருகிறது. இந்நிலையில், இரவு நேர பொது போக்குவரத்துக்கள் அனைத்து இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த வியாழக்கிழமை இரவு 10.30 மணியில் இருந்து நேற்று காலை வரை பொது போக்குவரத்துக்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டிருந்தன. அதைத் தொடர்ந்து, நேற்று வெள்ளிக்கிழமை இரவும் 10.30 மணியில் இருந்து சேவைகள் நிறுத்தப்பட்டது.

இதுதவிர இன்று சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவுகளிலும் இச்சேவைகள் நிறுத்தப்பட உள்ளன. பொது சொத்துக்கள், வாகனங்கள் அடித்து நொருக்கப்பட்டு எரியூட்டப்பட்டதை தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவில் இருந்து தொடர்ச்சியான மூன்றாவது நாள் இரவில் கலவரங்கள் இடம்பெற்றது. இதனால் பலர் கைது செய்யப்பட்டும், விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டும் வருகின்றனர். இதுதவிர, Nantes நகர் முழுவதும் கலவரம் அடக்கும் படையினர் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.