Jul 07

கெத்து காட்டும் ’ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R’ மாடல் பைக்; மிரட்டலான விலையில் அறிமுகம்!

தி எக்ஸ்ட்ரீம் 200R மாடல் மோட்டார் சைக்கிளுடன் ஹீரோ மோட்டார் கார்ப் லிமிடெட் மீண்டும் களமிறங்கியுள்ளது. 

இந்தியாவின் இருசக்கர வாகனத் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் ஹீரோ மோட்டோ கார்ப் லிமிடெட். இது பிரீமியம் மோட்டார் சைக்கிள் வகையிலான ‘தி எக்ஸ்ட்ரீம் 200R' வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.

வடகிழக்கு மாநிலங்களான அருணாசலப் பிரதேசம், அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, திரிபுரா, மேற்கு வங்கம் ஆகிய மாநில ஷோரூம்களில் ரூ.88,000 என விற்பனைக்கு வருகிறது. கடந்த ஜனவரியில் அறிமுகம் செய்யப்பட்ட ‘தி எக்ஸ்ட்ரீம் 200R' மோட்டார் சைக்கிள், ’சர்வதேச புத்த சர்க்கியூட்டில்’ பார்வைக்கு வைக்கப்பட்டது. இதன் விற்பனை இம்மாதம் முதல் தொடங்குகிறது.

முதலில் வடகிழக்கு மாநிலங்களில் விற்பனையை தொடங்கி, படிப்படியாக பிற மாநிலங்களில் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த மோட்டார் சைக்கிள் மாடலுடன், இந்தியாவின் பிரீமியம்/ஸ்போர்ட்ஸ் பைக் பிரிவில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மீண்டும் களமிறங்கியுள்ளது. 

இந்த பிரிவில் ஹீரோ நிறுவனம் அறிமுகம் செய்த மூன்றாவது பிரம்மாண்ட அறிமுகமான, ‘தி கரிஸ்மா’ பிரீமியம் ஸ்போர்ட்ஸ் பைக் வாடிக்கையாளர்களை பெரிதும் கவரவில்லை. இதையடுத்து ஸ்போர்ட்ஸ் பைக் பிரிவில் புதிதாக எந்தவொரு அறிமுகமும் செய்யப்படவில்லை. இந்நிலையில் தற்போதைய எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் மாடலை அடிப்படையாகக் கொண்டு, ‘தி எக்ஸ்ட்ரீம் 200R' மாடல் களத்தில் இறங்கியுள்ளது.