Mar 13

இந்த அரசாங்கத்தை இலகுவாகக் கவிழ்த்துவிட முடியாது: ஜனாதிபதி உறுதி

"ஊடக சுதந்திரத்தை பயன்படுத்தி சிலர் அரசாங்கத்தை விமர்சிக்கின்றனர். நீங்கள் வீட்டில் இருந்து மாலை வேளையில் தொலைகாட்சியை பார்த்தால் இந்த அரசாங்கம் விரைவில் கவிழும் என சிலர் கூறுவதை காணலாம். ஆனால், இந்த அரசாங்கத்தை இலகுவில் கவிழ்க்க முடியாது" என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார்.

வெல்லவாய பகுதியில் மக்களுக்கு காணி உறுதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வு வெல்லவாய பொது மைதானத்தில் இடம்பெற்றது.

இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, "ஊடக சுதந்திரத்தை பயன்படுத்தி சிலர் அரசாங்கத்தை விமர்சிக்கின்றனர். நீங்கள் வீட்டில் இருந்து மாலை வேளையில் தொலைகாட்சியை பார்த்தால் இந்த அரசாங்கம் விரைவில் கவிழும் என சிலர் கூறுவதை காணலாம்.

அதேபோன்று மேலும் சிலர் அரசாங்கம் தொடர்பில் பல்வேறு விளக்கங்களை முன்வைக்கின்றனர். ஊடகங்களில் கூறப்பட்டாலும் இந்த அரசாங்கத்தை இலகுவில் கவிழ்க்க முடியாது என்பதை நான் மிகவும் தெளிவாக கூறவேண்டியுள்ளது" எனத் தெரிவித்தார்.