Jul 06

பெர்ன் பகுதியில் மீண்டும் தென்பட்ட அரிய வகை கரடி

பெர்னில் உள்ள Lenk commune இன் Siebenbrunnen பகுதியில் ஒரு கரடி புதனன்று தென்பட்டது என Cantonal அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஊனுண்ணி சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு மேலாண்மையினால் வீடியோ காட்சி ஆராயப்பட்டு கரடியை கண்டமை உறுதிபடுத்தப்பட்டது.

கரடி காணப்பட்ட பகுதியில் காணப்பட்ட ஒரு இறந்த கன்று, ஆரம்ப அறிக்கையின்படி காட்டு விலங்குகளால் கொல்லப்பட்டதாக கருதப்படவில்லை. இது இப்போது பெர்ன் பல்கலைக்கழகத்தின் மிருக வைத்தியர்களால் ஆராயப்படுகிறது.

புதனன்று காணப்பட்ட கரடி M29 எனப்படும் கரடி மண்டலத்தில் பல சந்தர்ப்பங்களில் காணப்பட்ட கரடியா என்பது தெளிவாகத் தெரியவில்லை. M29 என்று அறியப்படும் இந்தக் கரடி இத்தாலியில் 2013ம் ஆண்டு பிறந்தது. இக்கரடி 2016 ல் ஸ்விட்சர்லாந்துக்கு வந்து சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.