Jul 06

மோசடி செய்த பிரிட்டிஷ் காதலர் சூரிச்சில் கைது

சுவிஸ் பொலிஸ், பெண்ணை ஏமாற்றி பணம் பறித்த பிரிட்டிஷ் நபர் ஒருவரை கைது செய்தனர். குறித்த நபர் ஒரு பெண்ணிடமிருந்து £850,000 (CHF1 million) மோசடி செய்ததாக வந்த குற்றச்சாட்டை அடுத்து சர்வதேச அளவிலான ஒரு தேடுதல் வேட்டையின் பின் சுவிஸில் கைது செய்யப்பட்டார்.

பிரிட்டிஷ் பொலிசாரால் தீவிரமாக தேடப்பட்டு வந்த 45 வயதான சந்தேகநபர், சூரிச் ஏரிக்கு அருகே ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருப்பதாக உறுதி செய்த பெடரல் அலுவலக பொலிசார், அவரை அங்கு கைது செய்தனர்.

குறித்த நபர் ஸ்பெயின் மற்றும் சுவிட்சர்லாந்தில் தொடர்ந்தும் ஒரு போலி பெயரில் வசித்து வந்தார்.

பிரிட்டனில் 61 வயதான பெண் ஒருவருடன் காதல் கொண்டதாக நடித்துள்ளார். மேலும் அவர் ஒரு இரகசிய சேவை முகவராகவும் ஒரு வங்கியாளராகவும் தன்னை அப்பென்ணுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். இரண்டு ஆண்டுகளாக அப்பெண்ணை அவர் அவ்வாறு ஏமாற்றியுள்ளார். இவர் 20 மோசடி குற்றங்களுக்கான குற்றவியல் வழக்குகளை பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் எதிர்கொள்வார். .

சுவிஸ் அதிகாரிகள் அவரை கைது செய்தது, தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திலான போலீஸ் ஒத்துழைப்புக்கு ஒரு நல்ல உதாரணம் ஆகும்.

குற்றவாளியின் உண்மையான பெயர் Mark Acklom என்பதாகும்.