May 30

இளைஞரை மூன்று நாட்கள் அடைத்து வைத்து கற்பழித்த பெண்கள்..!

தென் ஆப்ரிக்காவில் 22 வயதுள்ள இளைஞரை மூன்று நாட்கள் அடைத்து வைத்து கற்பழித்த பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த ஓர்டியல் என்ற 22 வயது இளைஞர், அந்நாட்டில் உள்ள பிரீடோரியா என்ற நகரில் டாக்சி டிரைவராக பணியாற்றி வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் அவரது டாக்சியில் ஏறிய பெண்கள் மூவர், அவருக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்திச் சென்றுள்ளனர்.மயக்கம் தெளிந்து ஓர்டியல் பார்த்த போது, அவர் ஒரு அறையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். பின்னர் அந்த மூன்று பெண்களும் சேர்ந்து ஓர்டியலை மூன்று நாட்களுக்கு கொடூரமான முறையில் கற்பழித்துள்ளனர். பின்னர் அவரை விடுவித்துள்ளனர்.

இந்த கற்பழிப்பு சம்பவம் குறித்து ஓர்டியல் தென்னாப்ரிக்க காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள அந்நாட்டு காவல்துறையினர், அந்த 3 பெண்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

தென்னாப்ரிக்காவில் பெண்களைப் போலவே, ஆண்களும் பாலியல் தொல்லைக்கு உள்ளாவது சகஜமான ஒன்றாகும்.