Mar 13

ரஜினி நடிக்கும் எந்திரன் 2.o படத்தின் தொலைக்காட்சி உரிமம் 110 கோடி?

ரஜினிகாந்த் நடிக்கும் எந்திரன் 2.o படத்தின் தொலைக்காட்சி உரிமம் 110 கோடிக்கு பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனமான ஜீ நெட்வொர்க் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய திரையுலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், இந்தி நடிகர் அக்ஷய் குமார் ஆகியோர் நடிப்பில், உருவாகி வரும் படம் எந்திரன் 2.o. லைக்கா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க, இந்த படத்திற்காக ஒலி அமைப்பை ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி மேற்கொண்டு வருகிறார்.

மேலும், புதிய தொழில்நுட்ப 3டி கேமிரா மூலமாக இந்தியாவில் ஒளிப்பதிவாகும் முதல் படம் என பல்வேறு சிறப்பம்சங்களை பெற்றுள்ள இந்த படத்தின் பட்ஜெட் இப்போதே  400 கோடியை நெருங்கி விட்டாதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.

இந்நிலையில், எந்திரன் 2.0 தொலைக்காட்சி உரிமம் 110 கோடி கொடுத்து ஜீ நெட்வொர்க் பெற்றுள்ளது என பிரபல சினிமா கட்டுரையாளர் ஸ்ரீதர் பிள்ளை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் ட்விட்டரில் தற்போது #2Point0 என்னும் ஹாஷ்டாக் ட்ரெண்டிங்களில் உள்ளது.