Jul 05

சுவிட்சர்லாந்து நாட்டின் மிக முதியவர் 115 வயதில் இறந்தார்

சுவிட்சர்லாந்தின் முதுமையான ஆண் குடிமகன் இறந்துவிட்டார், என Basellandschaftliche Zeitung அறிவித்தது.

Jafar Behbahanian என்று அறியப்படும் இந்த முதியவர், 1902 ஆம் ஆண்டில் பிறந்தார், இவர் பாசல் நகரில் சனிக்கிழமையன்று உடல் சுகவீனமின்றி இறந்தார். இப்போது ஈரான் என்று அழைக்கப்படும் பேர்சியாவைச் சேர்ந்தவர் தான் இந்த வயதானவர்.

அவர் தனது சொந்த நாட்டில் அரச தனியார் எஸ்டேட் நிர்வாகியாக பணி புரியும்  முன் Beirut  இல் கல்வி கற்றார். 1967 ஆம் ஆண்டு முதல் 1978 வரை துணை அமைச்சராகவும் பணியாற்றினார்.

1978 ல் இஸ்லாமியப் புரட்சி தொடங்கியபோது, Behbahanian சுவிட்சர்லாந்திற்கு ஓடி, கடைசியில் பேஸிலில் குடியேறினார்.