Jul 04

இரண்டாவது தடைவையும் இந்தியாவிற்கு குழிபறித்த சம்பந்தன் ? - யதீந்திரா


வடக்குகிழக்கில் வீடுகளை நிர்மானிக்கும் கட்;டுமான ஒப்பந்தம் ஒன்று சீன பெஜிங் பொறியியல் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் குறித்த நிறுவனம் 40ஆயிரம் வீடுகளை வடக்கு கிழக்கில் நிர்மானிக்கவுள்ளது. இதுதொடர்பில் கருத்துத் தெரிவித்திருக்கும் சிறிலங்காவின் புனர்வாழ்வு, மீள்குடியேற்ற வடக்கு அபிவிருத்தி அமைச்சர் சுவாமிநாதன்,தங்களது முடிவை நியாயப்படுத்தியிருப்பதுடன், தாங்கள் ஆராய்ந்தே இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிவித்திருக்கின்றார். ஆனால் இதுதொடர்பில் கருத்துத் தெரிவித்திருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக அறியப்படும் இரா.சம்பந்தன், சீன நிறுவனம் இதில் பங்குபற்றுவது தொடர்பில் தமக்கு ஒன்றும் தெரியாதுஎன்று தெரிவித்திருக்கின்றார். ஆனால் குறித்த சீன நிறுவனத்தின் மாதிரி வீடு ஒன்றை பார்வையிடுவதற்கு கூட்டமைப்பின் நாடளுமன்ற குழுவினர் பதுளை சென்றிருக்கின்றனர். அங்குவைத்து வீட்டு மாதிரியுடன் வீட்டுத் திட்டம் தொடர்பிலும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் தற்போது சம்பந்தன் தங்களுக்கு ஒன்றும் தெரியாது என்கிறார்.

 

கடந்த ஆண்டு சீனா வடக்குகிழக்கிலும் ஒரு தூதரகத்தை திறப்பது தொடர்பில் ஆர்வத்தை வெளியிட்டிருந்தது எனினும் அது இந்தியாவுடனான உறவில் பதட்டங்களை ஏற்படுத்தலாம் என்று கருதியோ என்னவோ அரசாங்கம் அதில் ஆர்வம் காண்பிக்கவில்லை. அத்துடன் அந்தக் கதை முடிந்துவிட்டது. இலங்கையின் தென் பகுதியில் சீனா வலுவாக காலூன்றிவிட்டது. சீனாவை நோக்கி கொழும்பு முற்றிலும் சாய்ந்து விடலாம் என்னும் ஒரு சூழலில்தான், 2015இல் ஒரு ஆட்சிமாற்றமொன்று இடம்பெற்றது. ஆனால் ஆட்சிமாற்றமொன்றின் மூலம் சீனாவின் செல்வாக்கை தடுத்துநிறுத்த முடியுமென்னும் இந்திய அமெரிக்க கூட்டு அனுகுமுறைகளும் எதிர்பார்த்தது போன்று பெரியவெற்றியை கொடுக்கவில்லை. ஆனால் தற்போது வேறுவழிகளில் வடக்கு கிழக்கு பகுதியிலும் காலூன்றும் முயற்சிகளை சீனா மேற்கொண்டுவருகிறதா என்னும் கேள்வி எழுந்திருக்கிறது.

 

இந்து சமூத்திர பிராந்தியத்தில் சீனா வலுவாக காலூன்றிவருவது தொடர்பில் பலவிதமான விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்தநிலையில்தான் சிறிலங்காவில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவது தொடர்பிலும் அதிக கரிசனைகாண்பிக்கப்படுகிறது. குறிப்பாக இது இந்திய கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் அதிக கரிசனையை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் இதில் கரிசனை காண்பிக்கப்பட்ட அளவிற்கு பெரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டதாகச் சொல்ல முடியாது. சிறிலங்காவின் மீதான தனது பிடியை சீனா மேலும் மேலும் இறுக்கிக் கொண்டே வருகிறது. இவ்வாறானதொருபின்புலத்தில்தான் தற்போதுவடக்குகிழக்கிலும் வீட்டுத் திட்டம் என்னும் பெயரில் சீனர்கள் காலூன்ற உள்ளனர். ஆனால் இவ்வாறான திட்டங்கள் அரசியல் ரீதியில் என்ன மாதிரியான சிக்கல்களை ஏற்படுத்தலாம் என்னும் எவ்விதகரிசனையும் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பிடம் இல்லை. ஆட்சிமாற்றத்தின் பின்னர் கூட்டமைப்புதமிழ் மக்களின் தலைமைஎன்னும் அனைத்துதகுதியையும் முழுவதுமாக இழந்துவிட்டது என்பதற்கு இதுவும் ஒரு சான்று. வடக்குகிழக்கிற்குள் சீனாவின் வருகைக்குவழிவிடக் கூடியஒருதிட்டத்தைஅரசாங்கம் தன்னிச்சையாக முடிவெடுத்து அமுல்படுத்துகின்றது. அதில் கூட்டமைப்பின் ஆலோசனைகள் உள்வாங்கப்படவில்லை என்று சம்பந்தன் கூறுகின்றார் என்றால்,சம்பந்தன் என்னசெய்து கொண்டிருக்கின்றார்?

 

ஆனால் இந்த இடத்தி;ல் எனதுசந்தேகமோவேறு. ஏனெனில் இதற்குமுன்னர் இடம்பெற்ற பிறிதொருசம்பவத்தை எடுத்து நோக்கினால் எனது சந்தேகம் சரி என்னும் முடிவுக்கே வரவேண்டிவரும். திருகோணமலை - சம்பூர் அனல் மின்நிலைய திட்டம் அப்பகுதிமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டதை நீங்கள் அறிவீர்கள். அத்திட்டம் அமுல்படுத்தப்பட்டால் அது தமது குடியிருப்புக்களுக்கு சூழலியல்சார்ந்து பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதே அவர்களது கரிசனையாக இருந்தது. அதில் நியாயமும் இருந்தது ஆனால் அந்தவிடயத்தை ஒரு இந்திய எதிர்ப்பு விடயமாக சிலர் பயன்படுத்திக் கொண்டனர். அந்த சந்தர்ப்பத்தில் சம்பந்தன், இத்தனைக்கும் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கிறவர், அதனை சரியாக கையாண்டிருக்கவேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை.

 

சம்பந்தன் தொடர்பில் பொதுவாக ஒரு அபிப்பிராயம் உண்டு. சம்பந்தன் இந்தியாவிற்கு நெருக்கமானவர். இந்தியாவின் நலன்கள் தொடர்பில் கரிசனையுடன் இருப்பவர். ஆனால் அது உண்மைதானா? சம்பூர் அனல் மின் நிலைய விடயத்தில் சம்பந்தன் இந்தியாவிற்கு எதிராகவே நடந்துகொண்டார். சம்பூர் அனல்மின் நிலைய விவகாரம் ஒரு பிரச்சினையாக எழுந்தபோது, சிறிலங்கா ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் ஒரு குரலில் இந்தியாவிடம் பேசியிருக்கின்றனர். எங்களுக்கு இதில் ஒரு பிரச்சினையும் இல்லை ஆனால் உங்களுடைய சம்பந்தன்தானே அதனை எதிர்க்கிறார். அவர் தன்னுடைய இறந்த உடல் மீதுதான் நீங்கள் இதனை கட்டியெழுப்பமுடியும் என்கிறார். நாங்கள் என்னசெய்வது?

 

உண்மையில் சம்பந்தன் இந்தியாவின் நலன்களில் கரிசனைகொண்டிருந்தால் இந்தியத் தூதுவரிடம் அல்லவா தனது குறைகளை பகிர்ந்து கொண்டிருக்க வேண்டும். அதில்   மாற்றங்களை செய்யுமாறு கோரியிருக்க வேண்டும். ஏன் அரசாங்கத்திடம் முறையிட்டார்?

 

இதனை அறிந்த அப்போதிருந்த இந்தியத் தூதுவர் சின்ஹா அதிர்சியடைந்திருக்கிறார்.  இதனை அவர் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சி ஒன்றின் தலைவரிடம் தெரிவித்திருக்கின்றார். இதனைக் கேள்வியுற்றச ம்பந்தன். தான் அப்படிச் சொல்லவில்லை என்று மழுப்பியிருக்கின்றார்.

தற்போது சீனாவின் விவகாரத்திலும் அவ்வாறே நடந்திருக்கிறது. மீண்டும் சம்பந்தன் தனக்கு ஒன்றும் தெரியாது என்று மழுப்புகின்றார். சொந்த மக்களுக்கு தீர்வு தொடர்பில் கதைசொல்லி ஏமாற்றிவருவது போன்று,பிராந்திய சக்தியான இந்தியாவையே ஏமாற்ற முற்படுகி;ன்றார்.

 

குறிப்பாக ஆட்சிமாற்றத்திற்கு பின்னர் சம்பந்தன் இந்தியாவை பெரிதாக பொருட்படுத்துவதில்லை. அவ்வப்போது உதட்டளவில் இந்தியாவின் ஆதரவு எங்களுக்குத் தேவை என்றவாறே பேசிவருகின்றார். சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவரான பின்னர் இதுவரை ஒருமுறை கூட புதுடில்லிக்கு சென்றதில்லை. இது தொடர்பில் முன்னர் ஒருமுறை சுரேஸ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியபோதுஅவ்வாறு நாம் சென்றால் சிங்களவர்கள் கோபிப்பார்கள் என்று பதிலளித்திருக்கின்றார். உண்மையில் சிங்களவர்கள் அல்லபிரச்சனை, அவ்வாறு நிகழ்ந்தால் அரசாங்கம் சம்பந்தன் மீது அதிருப்திகொள்ளும் - அவ்வாறு நேர்ந்தால் தான் அனுபவித்துவரும் அரச சலுகைகள் இல்லாமல் போய்விடும்.

 

உண்மையில் ஆட்சிமாற்றத்திற்கு பின்னர் அரசாங்கத்தின் நிகழ்சிநிரலை பேணிப் பாதுகாக்கும் ஒரு வேலையை மட்டுமே சம்பந்தன் செய்து கொண்டிருந்தார்தற்போதும் செய்துவருகிறார். இவ்வாறானதொரு பின்னணியில்தான் சம்பூர் அனல் மின்நிலைய திட்டத்தின் போதும் தற்போது வடக்குகிழக்கில் வீடமைப்பு திட்டத்தை சீனநிறுவனம் ஒன்றின் ஊடாக அமுல்படுத்துவது தொடர்பிலும் அரசாங்கத்தின் நிகழ்சிநிரல் என்னவோ அதுவே சம்பந்தனின் நிகழ்சிநிரலாகவும் இருக்கிறது. இந்தபின்புலத்தில் இந்தியாவின் நலன்களை பலிகொடுக்கும் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு சம்பந்தனும் ஆதரவு வழங்கிவருகின்றார். இது நீண்டகாலநோக்கில் தமிழ் அரசியல் பரப்பில் பாரதூரமானவிளைவுகளை ஏற்படுத்தும்.

 

இதில் சம்பந்தனை மட்டும் குற்றம் சாட்டிவிட்டு கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் அமைதியாக இருக்க முடியுமா? கூட்டமைப்பிற்குள் புதியவர்களின் செல்வாக்கு அதிகரித்து வருவதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அவ்வாறான புதியவர்கள் இந்தியா தொடர்பில் அறியாதவர்கள்.