Jul 04

மேகத்தில் நடந்து சென்ற கடவுள்? ஆச்சரியமடைந்த மக்கள்!

அமெரிக்காவின் அலபாமா பகுதியில் மேகத்தில் ஒரு மனித உருவம் நடக்கும் ஆச்சரிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ள நிலையில் அது கடவுளின் உருவம் என்று சிலர் கூறியுள்ளனர்.

Solo Dolo என்னும் ஒரு பெண், பேஸ்புக் லைவில் புயலை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்.

”இங்கு புயலடிக்கிறது, மின்சாரம் இல்லை, மரங்களும் பெட்டிகளும் காற்றில் அடித்துச் செல்லப்படுகின்றன” என்று வர்ணனை செய்து கொண்டிருந்தார் அவர்.

பின்னர் அந்த வீடியோவை அவர் பேஸ்புக்கில் அப்லோட் செய்தார்.

அந்த வீடியோவைப் பார்த்த அவரது நண்பர் ஒருவர், மனித உருவம் ஒன்று அந்த மேகத்தில் நடந்து செல்வதைக் கவனித்தார்.

சிலர் அது கடவுள் என்றார்கள், ஒருவர், கடவுள் இருக்கிறார் என்பது உண்மைதான் என்று இடுகையிட்டார்.

அந்த வீடியோ ஒரு மில்லியன் முறைக்கும் அதிகமாக பார்க்கப்பட்டதோடு 7000 பேர் அதைக் குறித்து கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.