Jul 04

பிரான்ஸில் பெண்களிற்கு கட்டாயமாக்கப்பட்ட ‘மினி ஸ்கேர்ட்’

பிரான்ஸில், இந்த கோடை காலத்தில், பேருந்து சாரதிகள் காற்சட்டை அணிந்து கடமையில் ஈடுபட RATP அனுமதி வழங்கியுள்ளது. 

பிரான்ஸில் வெப்பநிலை 28°c க்கு மேல் நிலவும்போது, பேருந்து சாரதிகள் காற்சட்டைகள் அல்லது முக்கால் காற்சட்டைகள் அணிவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனாலும் அதற்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதில் குளிரூட்டிகள் இல்லாத சாதரண பேரூந்து ஓட்டுனர்களுக்கு மாத்திரமே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, அன்றைய நாளில் 28°c வெப்பத்துக்கு மேல் நிலவ வேண்டும். மற்றும், இந்த அனுமதி செப்டெம்பர் மாத இறுதி வரை மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.

இந்த முடிவினால் 15,000 சாரதிகள் கோடை வெயிலை சமாளிப்பதற்கு ஏதுவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பெண் சாரதிகளுக்கு ‘மினி ஸ்கேர்ட்’ அணிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த வருடம், கோடைகாலத்துக்கு ஏற்றவகையில் ஆடைகள் அணிய எங்களுக்கு அனுமதி வேண்டும் என பேருந்து சாரதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதன் பின்னரே இவ் அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.